Aran Sei

கூவம் ஆற்றில் சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல் – நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை உறுதி

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் நேப்பியர் பாலத்திற்கு அருகில் ஒருவருடத்திற்கும் மேலாகச் சட்டவிரோதமாக  மணல் அள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம்  நேற்றைய தினம்  பொதுப்பணித்துறை மற்றும்  காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் இந்த விவகாரத்தைக் கண்டறிந்துள்ளதாகவும், தலைமை செயலகத்திற்கு அருகில்  சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே லாரிகள் மணல் அள்ளி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள், இதுகுறித்து தெரியவில்லை என்றும் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மணல் அல்ல அனுமதியளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அரசின் உத்தரவின் பேரில் மட்டுமே இந்தப்பகுதியில் மணல் அள்ள முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2௦13 ஆம் ஆண்டு இந்தப்பகுதியிலிருந்து  11,000 கன மீட்டர் மணல் வல்லூர் அனல் மின்நிலையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதியளித்து  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அந்த  ஆற்று மணலில் கலப்படம் செய்யக் கடல் மணல் பயன்படுத்தப்பட்டதாக வெளியான அறிக்கைகளை அடுத்து  அந்த உத்தரவு  2௦14  ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடல் மணலை கொண்டு கட்டப்படும்  கட்டிடங்கள் தரமற்றதாக இருக்கும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த மணல்  40,000-Rs 50,000  வரை விற்கப்படக்கூடும் என்றும் தமிழ்நாடு மணல் அள்ளும் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியுள்ளார்.

ஒரு லாரியில் 6 அலகு மணல் பிடிக்கும் , ஒரு அலகு மணல் 2.83 கன மீட்டர்  அளவு கொண்டது. ஒருவேளை  15 லோடு மணல்  அப்பகுதியிலிருந்து ஒரு இரவுக்கு  அள்ளப்பட்டால் ஒரு லோடுக்கு 2௦,௦௦௦ வீதம் வைத்துக்கொண்டால்  ஏறத்தாழ 3 லட்சம் வருவாய்  தரக்கூடியது.

மேலும், அதிகாரப்பூர்வக் கணக்கீட்டின் படி, இந்தப் பகுதியில்  ஒரு லட்சம் கன மீட்டர் மணல் கடல் அலையின் போக்கின் மூலம் குவிவதாகவும், இது  25,௦௦௦ லாரிகளில் எடுத்துச் செல்லப் போதுமான மணல் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால், கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு மேற்கொண்டபோது  இந்தப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு பள்ளங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது, மணல் பகுதிய்ல் போக்குவரத்து செய்ய ஏதுவாக இருக்கது என்பதால் வாகனங்கள் செல்வதற்காக இந்தப் பகுதியில் கட்டிடக் கழிவுகளும்   கொட்டப்பட்டுள்ளன.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்