Aran Sei

மருத்துவக்கல்வி : சமூக நீதிப் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியதையடுத்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஆணைகளை மாணவர்களிடம் இன்று வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுக்கக் குரல்கள் எழுந்தன. கல்வியாளர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஓரணியில் நின்று குரல் எழுப்பினர்.

இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து- கார்ப்பரேட் பாணி கோச்சிங் சென்டர்களில் பயின்று – ஒருமுறைக்கு இருமுறை மூன்று முறை நீட் தேர்வு எழுதினால்தான் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக் கனியாகிவிட்டது. அதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்

 

தமிழக அரசு, ஆளுநரின் உத்தரவுக்குக் காத்திராமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணைவெளியிட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக, தமிழ முதலமைச்சரால் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 45 நாட்கள் கடந்த நிலையில் அம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 303 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்

 

தமிழக அரசின் ஆணைப்படி மருத்துவச் சேர்க்கை நடைபெற்றது. நீட் தேர்வில் தேர்வாகிய 300 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் இதில் பயன் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை மாணவர்களிடம் வழங்கிய தமிழக முதல்வர்” இன்று என்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக சமூக நீதிப் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல் என்று மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்