Aran Sei

’கன்னியாகுமரியில் திருவிதாங்கூர் சமஸ்தானம் வழங்கிய 36000 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்’ – தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

ழங்குடி மக்களுக்கு எதிராகவும் கார்பரேட் கம்பனிகளுக்கு ஆதராவாகவும் சட்டத்திருத்தம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு முயல்கிறது என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று(அக்டோபர் 21), அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூடி தீர்மானங்களை இயற்றியுள்ளது. அதில்,

  1. பழங்குடி மக்களுக்கு உழுவதற்கு நிலம் குடியிருக்க வீடும் ஒன்றிய மாநில அரசுகளை கேட்பதென தீர்மானிக்கப்பட்டது.
  2. 2006-வன உரிமை சட்டத்தை தமிழ் நாட்டில் நடைமுறை படுத்தவேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. பழங்குடி சமூகச்சான்று கோட்டச்சி தலைவர் வழியாக கொடுப்பதை நிறுத்தி வட்டாட்சியர் வழியாக காலதாமதம் இல்லாமல் சாதி, மதம் சாராமலும் உடன் சான்று வழங்க வேண்டும்.
  4. மலைகளிலும் மலைச்சார்ந்த பகுதிகளிலும் 1989-லிருந்து சாகுபடி நிலங்களுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் பட்டா வழங்குவதை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தமிழ்நாடு அரசு உடன் பட்டா வழங்க வேண்டும்.
  5. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் பழங்குடி மக்களுக்கு 36000 ஏக்கர் நிலத்தை இஸ்டதானமாக பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளது. அந்த நிலத்தை பிறர் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பழங்குடி மக்களுக்கே வழங்க வேண்டுமென்றும் 10 சென்ட் நிலம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் திர்மானிக்கப்பட்டது.
  6. சரணாலயங்கள் அமைப்பதின் பேரில் பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றக் கூடாது. குஜராத்தில் சிங்கம் வசிக்கும் சரணாலயத்திலிருந்து கூட வெளியேற்றவில்லை. மக்கள் இல்லாத பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும்.
  7. பூர்வீகமாக பழங்குடி மக்கள் குடியிருக்கும் நிலத்திற்கும் சாகுபடி செய்யும் நிலத்திற்க்கும் உடன் பட்டா வழங்க வேண்டும்.
  8. பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளின் தரத்தை உயர்த்தி சாலை போக்குவரத்திற்க்கான் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  9. வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கே வனத்தின் பணியை கூடுதலாக்கி வனக்காவலர் பணி வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் படி 100 நாள் என்பதை மாற்றி 200 நாட்களுக்கு அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.
  10. பழங்குடி மக்களின் அனைத்து செட்டில்மெண்ட் நிலத்திற்கும் பட்டா கொடுக்கும் நிலமாக மாற்றம் செய்து அரசின் உதவிகளை பெறும் வகையில் கொண்டு வர வேண்டும்.
  11. 1980 வன பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை கணக்கில் கொள்ளாமல் பழங்குடி மக்களுக்கு எதிராக கார்பரேட் கம்பனிகளுக்கு ஆதராவாக சட்டத்திருத்தம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்ற நினைப்பதை கண்டித்தும்
  12. பழங்குடி மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கவும் வனம் மேம்படவும் மாநில ஒன்றிய அரசுகள் பழங்குடி பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பினை வழங்கும் MNREGS திட்டத்தை முறைப்படுத்தி தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்