Aran Sei

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஆதிக்க சாதிகளை அதிகளவில் களமிறக்கியுள்ள திமுக, அதிமுக : ஆய்வு முடிவுகள்

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பெரும்பான்மையான சட்டமன்ற தொகுதிகளை வன்னியர், தேவர், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சமூகங்களுக்கு வழங்கியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்தச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சாதிகளை Forum For Real Social Justice And Inclusion (உண்மையான சமூக நீதி மற்றும் சேர்க்கைக்கான அமைப்பு) ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேவர், வன்னியர் மற்றும் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் 38.46 விழுக்காடு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அதிமுகவில் தேவர், வன்னியர் மற்றும் கவுண்டர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் 47.44 விழுக்காடு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், திமுக கூட்டணி சார்பில் 37 வன்னியர்களுக்கும், 27 கவுண்டர்களுக்கும், 27 தேவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் 42 வன்னியர்களுக்கும், 32 கவுண்டர்களுக்கும், 37 தேவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பொய்யை குழித்தோண்டிப் புதைப்போம்’ – ஸ்டாலின்

மேலும், திமுக கூட்டணியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 13 பேரும், நாயுடு சமூகத்தைச் வேட்பாளர்கள் 15 பேரும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதிமுக தரப்பில் 10 நாயுடு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

’ஒத்த எண்ணம் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி உறுதி’ – பாஜக தேசியத் தலைவர் அறிவிப்பு

திமுக தரப்பில் நாடார் (இந்து) சமூகத்தைச் சேர்ந்த 7 வேட்பாளர்களும். அதிமுக தரப்பில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

அரசியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்த கூடாது – உதயநிதிக்கு அறிவுரை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

மதச் சிறுபான்மையினர்களை பொறுத்தவரை, திமுக சார்பில் 11 இஸ்லாமியர்களும், 10 கிறிஸ்துவர்களும் ( 7 நாடார்கள்) வேட்பாளராக களமிறங்கப்பட்டிருப்பதாகவும், அதிமுக சார்பில் 4 இஸ்லாமியர்களும், 8 கிறிஸ்துவர்களும் களமிறங்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வு கூறியுள்ளது. ஆனால், கிறிஸ்துவர்கள் தரப்பில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த, ஒருவருக்கு கூட இரண்டு கட்சிகளும் வாய்ப்பளிக்கவில்லை என ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிமுக – அமமுக இணைப்பு வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஒரு வேட்பாளரை கூட திமுக கூட்டணி தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை எனவும் இசை வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு வேட்பாளருக்கு கூட அதிமுக வாய்ப்பளிக்கவில்லை எனவும் ஆய்வு கூறியுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் 3 இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அதிமுக தரப்பில் இரண்டு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அதிமுக ஆட்சிக்கு அல்ல எதிர்கட்சியாகக் கூட வரமுடியாது’ – ஸ்டாலின்

பட்டியல் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 44 தனி தொகுதிகளை பொறுத்தவரை, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் அருந்ததியர் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், பட்டியல் பிரிவில் இருக்கும் மற்ற சாதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்றொரு ஆய்வு கூறியுள்ளது.

‘சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிடும் குருமூர்த்தி; அமைதிகாத்து ஆமோதிக்கிறதா அதிமுக?’ – திமுக கேள்வி

திமுக கூட்டணியில் 4 அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அதிமுக கூட்டணியில் 3 பேரும் வேட்பாளாராக நிறுப்பட்டுள்ளனர். இரண்டு கட்சிகளும் 14 முதல் 15 வேட்பாளர்களை, தேவந்திர குல வேளாளர்கள் சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய அரசு, அளித்துள்ள தகவலின் படி, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் 140 சாதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் 46 சாதிகளும், சீர்மரபினர் சமுதாயத்தில் 67 சாதிகளும், பட்டியல் சமுதாயத்தில் 71 சாதிகளும், பட்டியல் பழங்குடியினர் சமுதாயத்தில் 36 சாதிகளும், பட்டியல் பிரிவு அருந்ததியர் சமுதாயத்தில் 7 சாதிகளும் இருப்பதாக கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

SOURCE : THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்