நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, நீட் தேர்வு தொடர்பான மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் தாமதப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் செய்துள்ளனர்.
நேற்று(ஜனவரி 31), நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனது உரையைத் தொடங்க ராம்நாத் கோவிந்த் எழுந்து நிற்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்றுள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி காலதாமதம் செய்கிறார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்
இவ்விவகாரத்தை குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தங்கள் இருக்கைகளில் அமருமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் கோர, அவர்கள் அமர்ந்துள்ளனர். அதன் பின்னர், குடியரசுத் தலைவர் தனது உரையை தொடங்கியுள்ளார்.
அண்மையில், கல்வித்துறையில் மாநிலங்களின் முதன்மையான உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு பல மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.