Aran Sei

உள்ளாட்சி தேர்தல் – திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி

வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 49 வயதான திருநங்கை கங்கா வெற்றிப்பெற்றுள்ளார்.

பிப்பிரவரி 19ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை, இன்று(பிப்பிரவரி 22) காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்ட்டுகள் உள்ளன. இதில், 37ஆவது வார்ட்டில் திமுக சார்ப்பில் களமிறக்கப்பட்ட திருநங்கை கங்கா வெற்றிப்பெற்றுள்ளார்.

கங்காவிற்கு சக திருநங்கை உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்