Aran Sei

மார்ச் 28, 29 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் வேலை நிறுத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இதேப் போன்று, “பணிக்கு வராமல் வேலைநிறுத்ததில் பங்கேற்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியம் வழங்கப்படாது” என்று மின்சாரிய வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது, அன்றைய தினங்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்என்று அச்சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்