Aran Sei

‘சூழலியல் பாதிப்பு ஏற்படுத்திய குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

ட்ட விரோதமாக இயங்கும்  குவாரிகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகளுக்கு  உரிய அபராதம் விதிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005 முதல் 2020 வரை உரிமமின்றி  சட்டவிரோதமாக செயல்பட்ட  குவாரிகளால்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிய மனுவை விசாரித்த , தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது  ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், சட்டவிரோத குவாரிகள் நிறுத்தப்பட்டு,  சட்டவிரோதக் குவாரிகளை நடத்தி வருபவர்கள்  மீது கனிமவளச்  சட்டம், மற்றும் குற்றவியல்  சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டும் போதாது ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புக்கு அபராதம் விதிக்க வேண்டுமென தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்