Aran Sei

அயோத்தியா மண்டபம்: போராட்டம் நடத்திய பாஜக – தேவையில்லாமல் அரசியலைப் புகுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

யோத்தியா மண்டபம் தொடர்பான பிரச்சினையில், தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி பாஜகவை பலப்படுத்த நினைப்பது நடக்காது என்று வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்துல தொடுக்கப்பட்ட வழக்கில், அம்மண்டபம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும் வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் அதில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக  மண்டபத்திற்கு வந்தனர். அப்போது, பாஜக உறுப்பினர்கள் அங்கு திரண்டு வந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மண்டபத்தின் கதவுகளை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

பாஜக தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் கரு நாகராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்த பலர், மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

கரு நாகராஜன், உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது, தடையை மீறி செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை அசோக்நகர் காவல்துறையினர் இன்று (ஏப்ரல் 12) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 12), சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் தொடர்பாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகளின் பழக் கடைகளைச் சேதப்படுத்திய வலதுசாரிகள் – காவல்துறை வழக்கு பதிவு

இத்தீர்மானத்திற்கு பதில் அளித்துள்ள பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, கேஸ் சிலிண்டர் விலை… இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: கோயிலில் இஸ்லாமியர்கள் கடை போட்டால் இந்துக்கள் எவ்வாறு உணர்வார்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கேள்வி

“அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, பிரதமரிடம் நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன். எனவே, அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

*************************                               ************************                        *******************

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மிரட்டும் இந்துத்துவாவினர். பதிலளிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்.

தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்