Aran Sei

நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அனுப்புங்கள் – தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில் ஆளுநருக்கு முதல்வர் கடிதம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் வகையில் விரைவில் அனுப்பவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழ்நாடு ஆளுநராக நீங்கள் பொறுப்பேற்ற சில மாதங்களாக நாம் நல்லுறவைப் பேணி வருகிறோம். இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாடு மக்களின் விருப்பத்திற்கு எனது அரசு அதிக மதிப்பளிப்பதையும் கவனித்திருப்பீர்கள். அதன்படி, மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிர்கு விலக்கு அளித்து, பிளஸ் 2 பொதுத் தேர்வு அடிப்படையில் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற மசோதாவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

‘நீட் தேர்வு பாதிப்பைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு செய்தீர்களா?’- திமுகவின் கேள்வியும் ஒன்றிய அரசின் பதிலும்

அதன்படி, உங்களுடன் எனது முந்தைய கலந்துரையாடலின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது குறித்து விளக்கியிருந்தேன். நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மக்களுக்குக் கவலைக்குரிய விஷயமாக இருந்தது.

அது படிப்படியாக வளர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமித்த கருத்தாக நிறைவேற்றப்பட்டது. அதில் சில சில விளக்கங்கள் மற்றும் மறுபரிசீலனை செய்வதற்காகச் சட்டப்பேரவைக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. அதனை நாங்கள் விரோத நிலைப்பாடாகப் பார்க்கவில்லை.

அதன்படி, அரசியலமைப்பு செயல்முறைக்கு இணங்கி, நீங்கள் எழுப்பிய விஷயங்களைத் தெளிவுபடுத்தி, மீண்டும் மசோதா நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பினோம். உங்களை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசிய பின்னரும், நீட் தேர்வு மசோதாவானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மராட்டிய மாநில காங்கிரஸ்: நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி என அன்புமணி வரவேற்பு

அடுத்த கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகள் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையும், நிச்சயமற்ற நிலையும் உள்ளது.

மேலும், நான் நேரில் சந்தித்து மசோதா குறித்து வலியுறுத்தியபோது ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும், கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், முன்னேற்றம் இல்லை. இதனால், எனது அமைச்சரவையின் 2 மூத்த அமைச்சர்கள் உங்களைச் சந்தித்து இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த அனுப்பிவைத்தேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த கலந்துரையாடலின் போது மசோதாவானது குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அவர்களுக்குச் சாதகமான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.

மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பொருத்தமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இனியும் தாமதிக்காமல் நீட் மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, அதன் மூலம் அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மக்களும், மாநிலமும் வளம் பெறும் என்றும் உங்களுக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமுகமாகவும் இருக்குமென்றும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்