மேற்குவங்க மாநில சட்டபேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால், பாஜகவின் தாமரைச் சின்னத்தில் வாக்களிக்கப்பட்டதாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், இன்று (மார்ச் 27) தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று (மார்ச் 27) காலை, முதற்கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அம்மாநில ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காந்தி தக்ஷின் சட்டபேரவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸுக்கு தாங்கள் வாக்களித்ததாகவும், ஆனால் பாஜகவுக்கு வாக்களித்ததாக அடையாளச் சீட்டு வருகிறது என்று பல வாக்காளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது மிகவும் மோசமானது. இது மன்னிக்க முடியாதது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shocking claim by voters which must be immediately looked into by @ECISVEEP and @CEOWestBengal.
Many voters in Kanthi Dakshin assembly seat allege that they voted for TMC but VVPAT showed them the BJP symbol. THIS IS SERIOUS! THIS IS UNPARDONABLE! pic.twitter.com/E0Bjjbc89y
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
மேலும், வாக்காளர்களை அதிர்ச்சியுறச் செய்யும் இவ்விவகாரத்தை மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையமும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.