Aran Sei

பெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்

Image credit : thewire.in

தேசிய பாதுகாப்பு மற்றும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்          அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலாக வலியுறுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 2), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டெரெக் ஓ பிரையன், ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் விலைவாசி உயர்வு, பொருளாதாரம், வேலையின்மை, பணவீக்கம் போன்றவை மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு மற்றும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் உடனடி விவாதம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்

மேலும், “அவர்கள் (ஒன்றிய அரசு) தேசிய பாதுகாப்பு மற்றும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் விவாதத்தைத் தொடங்க வேண்டும். அதில், அனைத்து எதிர்க்கட்சிகளும் முழுமையான உடன்படுகிறது. நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். ஆகவே, மோசமான தந்திரங்களைக் கையாண்டு, இதில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயல வேண்டாம்.” என்று டெரெக் ஓ பிரையன் எச்சரித்துள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்