Aran Sei

‘மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ – பாஜகவினரின் கருத்தைக் கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை பிரித்து தனி யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும் என்றுக் கூறிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அம்மாநிலத்தின் எண்ணற்ற பகுதிகளில் புகார் அளித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பாஜக திரிணாமூல் காங்கிரசிடையே வலுக்கும் மோதல்

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை ஒட்டியுள்ள கூச் பெஹார் பகுதியில் உள்ள மூன்று காவல்நிலையங்களில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பார்லாவின் மீது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பார்லாவின் இந்த கருத்தினால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறியுள்ளது.

அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு

இந்த கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைமை பலத்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும், மாநிலத்தை பிளவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் மாநில மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்