ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் என்பது “முதலாளிகளால் அரசும் தனியார்மயப்படுத்தப்படுகிறது” என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு இந்த முடிவைத் திரும்பபெற வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா சுக்கேந்து சேகர் ராய், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நடைபெறாத வகையில் “ஒன்றிய அரசு பயனற்ற வகையில் பகாசுர நிறுவனங்களுக்கு அடிபணிந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், “பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்களால் நடத்தப்படுகிறது. கார்ப்பரேட்களால் கார்பரேட்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த அரசு முதலாளிகளால் முற்றிலும் தனியார்மயப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “தேசிய பணமாக்கல் திட்டம் என்பது உண்மையில் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தான். ரயில்வேயில் தொடங்கி துறைமுகம், நெடுஞ்சாலை என அரசு எல்லாவற்றையும் விற்கிறது. இது திவாலான அரசாங்கம். இந்தத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் ” என்றும் சேகேது சேகர் ராய் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கள் கிழமை அன்று. உள்கட்டமைப்பு துறை சொத்துகளை மதிப்புகளை வெளிக்கொணரும் வகையில் 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்திருந்தார்.
source: பிடிஐ
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.