Aran Sei

பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் மம்தா பின் அணிதிரள வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு

மேற்கு வங்காளத்தில், மதவாதி பாஜகவை வீழ்த்துவதற்கு, காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின் அணி திரள வேண்டும் என்று. அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

திரிணாமுலின் இந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள காங்கிரஸ், இரண்டு கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்ப்பதற்கு பதில், திரிணாமுல் கட்சியை, காங்கிரசுடன் இணைக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திரிணாமுல் கட்சியின் இந்த முடிவு, மேற்கு வங்க மாநிலத்தில் அந்த கட்சியால் தங்களை தனியாக வீழ்த்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

“இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் உண்மையிலேயே பாஜகவை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த கட்சியின் மதவாதி மற்றும் பிரிவினை கொள்கையை எதிர்க்கும் மம்தா பானர்ஜி பின்னே அவர்கள் அணிதிரள வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுகதா ராய் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ந்ததற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளால் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்த திரிணாமுல், தற்போது எங்களுடன் சேர ஏன் விரும்புகிறது. பாஜகவை எதிர்ப்பதில் ம்மதா பானர்ஜி அக்கறை காட்டினால், இந்தியா அளவில் மதவாதத்தை எதிர்க்கும் தளமாக விளங்கும் காங்கிரஸ் கட்சியுடன் அவர் கட்சியை இணைக்க வேண்டும்” என்று அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் பெரிய அளவில் பலம் இல்லை என்று கூறிய மம்தா பானர்ஜி தற்போது எங்களை அழைப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

“இதன் மூலம் நாங்கள் பலமாக உள்ளோம் என்பத நிரூபணமாகியுள்ளது. இடதுசாரிகளும், காங்கிரசும் இணைந்து, திரிணாமுல் மற்று பாஜகவை தோற்கடிப்போம்” என்று சுஜன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் கோஷ் “அவர்களால் (திணாமுல் காங்கிரஸ்) எங்களோடு தனியாக போட்டி போட முடியாது. அதனால்தான் பிற கட்சிகளின் உதவியை கேட்கிறார்கள். ஆகவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பாஜக என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன. மொத்தம் உள்ள 42 இடங்களில், இடதுசாரிகளால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாத நிலையில், காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 18 இடங்களை கைப்பற்றியது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்