Aran Sei

வியாபாரத்திற்காக பார்ப்பனமயமாகிறதா நெட்பிளிக்ஸ்? – ‘நவரசா’ குறித்து இயக்குநர் லீணாமணிமேகலை விமர்சனம்

நீங்கள் இந்தியாவில் பிராமணராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் நீங்கள் கறுப்பினத்தவர்களின் அரசியல் குறித்து பேசுகையில், அது ஒரு கேலிக்கூத்தாகதான் இருக்கும் என்று கவிஞரும் இயக்குனருமான லீணா மணிமேகலை கண்டித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில், ஒன்பது குறும்படங்களை தொகுத்து, நவரசா என்ற பெயரில் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன் வழியாக வரும் வருமானம் கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிற் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ், பிரியதர்ஷன், வசந்த் ரவி, அரவிந்சாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் இக்குறும்படங்களை இயக்கியுள்ளனர்.

இக்குறும்பட தொகுப்பு தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இசை கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா, “நவரசத்தில் உள்ள ஹஸ்யம் (ஒன்பது குறும்படங்களில் ஒன்று) உண்மையிலேயே அருவருப்பாகவும். சாதிவெறியுடனும், உருவக்கேலிகளுடனும் உள்ளது. இதில் சிரிக்க எதுவும் இல்லை. 2021-ல் இதுபோன்ற படங்களை நாம் உருவாக்க கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படம் நம் சமூகத்தின் மீது வெறுப்பை காட்ட வைக்கும் பணியைதான் செய்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது குறும்படங்களில் ஒன்றான ஹாஸ்யத்தை, யோகி பாபு, ரம்யா நம்பிசன் ஆகியோர் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

நவரசா குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞரும் இயக்குனருமான லீணா மணிமேகலை, “வணக்கம் நெட்ப்ளிக்ஸ், நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் திரைப்படங்களை வாங்க சன்டான்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றீர்கள். கலையை புதிய எல்லைகளுக்கு இட்டுச்செல்லும் திரைப்படங்களுக்கும் இயக்குனர்களுக்கும் நீங்கள் முதலீடு செய்தார்கள். அதில் வெற்றியும் பெற்றீர்கள். இந்தியாவில், நீங்கள் பார்ப்பணமயமாகி , மார்க்கெட்டில் விற்கும் படைப்புகளுக்காக மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் வீழ்ச்சி எனக்கு வேதனையளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

“பார்த்தா பன்னி மாதிரி இருக்கும். ஆனா, அது நாய்தான். நம்ம வேலுச்சாமி. நவரசாவின் இரண்டாவது குறும்படமான ஹாஸ்யத்தில் இவ்வசனம் வருகிறது. வெட்கக்கேடு நெட்ப்ளிக்ஸ். என்ன ஒரு போலித்தனம் இது நெட்ப்ளிக்ஸ். அமெரிக்காவில் நீங்கள் கறுப்பினத்தவர்களுக்கும், பூர்வக்குடிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறீர்கள். சமூகநீதியுடன் செயல்படுகிறீர்கள். ஆனால், இந்தியாவில் சாதியவாதியாக செயல்படுகிறீர்கள்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நன்றி : Netflix

நீங்கள் இந்தியாவில் பிராமணராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் நீங்கள் கறுப்பினத்தவர்களின் அரசியல் குறித்து பேசுகையில், அது ஒரு கேலிக்கூத்தாகதான் இருக்கும் என்று லீணா மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

‘நவரசா!’ – நவீன கால பரத முனியாக அவதரித்திருக்கும் மணிரத்னம்!

வாழ்க மக்கள் தலைவன் சுலைமான் அலி அகமது!’ – ‘மாலிக்’ பேசும் அரசியல் என்ன?

திரைப்பட தணிக்கை சட்ட (திருத்த) வரைவு மீதான மக்கள் கருத்து – திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்