Aran Sei

விசாயிகளின் போராட்டம் – ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

2020:

செப் 14 – நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகம்.

செப் 17 – மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்.

செப் 20 – மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்.

செப் 25 – வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டத்திற்கு விசாயிகள் அறைகூவல்.

செப் 27 – வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்.

நவ 3 – விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. தேசிய அளவிலான சாலை மறியலுக்கு விவசாயிகள் அழைப்பு.

நவ 26 – பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ”டெல்லி சலோ”  என்ற முழக்கத்தில் டெல்லியை நோக்கிய பேரணியை தொடங்கினர்.

நவ 26 – இந்த பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகள் வைத்து காவல்துறை தாக்குதல்.

நவ 28 – டெல்லி எல்லையில் இருந்து வெளியேறினால் தான் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து.

டிச 3 – ஒன்றிய அரசு விவசாய சங்க தலைவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

டிச 5 – ஒன்றிய அரசு விவசாய சங்க தலைவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. எந்த முடிவும் எட்டப்படவில்லை.

டிச 8 – நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு.

டிச 9 – வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது, இருப்பினும் சில திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என அரசு கூறியதை விவசாயிகள் நிராகரித்தனர்.

டிச 11 – மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

2021:

ஜன 4 – விவசாயிகள், ஒன்றிய அரசுக்கு இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஜன 7 – உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஜன 8 – விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படாமல் போராட்டக் களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என விவசாய சங்கங்கள் உறுதி.

ஜன 11 – விவசாய சட்டங்கள் தொடர்பாக ஆராய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

ஜன 12 – வேளாண் சட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு அறிவிக்கும் வரை, வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை.

ஜன 15 – விவசாயிகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையேயான ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஜன 21 – அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றரை ஆண்டுகள் தள்ளி வைக்கவும், ஒருங்கிணைப்பு குழு அமைக்க தயார் என்றும் அரசு அறிவிப்பு. இதை விவசாயிகள் நிராகரித்தனர்.

ஜன 26 – டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

ஜன 28 – காசியாபாத் மாவட்ட நீதிபதி போராட்டக்காரர்களை டெல்லி எல்லையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறார். இதை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரதம் தொடங்கினர்.

பிப் 2 – சர்வதேச பாப் பாடகி ரிஹானா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேடா துன்பெர்க், கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் போன்ற சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிப் 5 – கிரேடா துன்பெர்க் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போராட்டம் குறித்த தகவலை (Toolkit) உருவாக்கியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு.

பிப் 9 – குடியரசு தினத்தன்று நடைபெற்ற கலவரத்திற்கு காரணமான பாஜக ஆதரவாளரான தீப் சித்து கைது.

பிப் 14 – டூல்கிட் வழக்கில் சூழலியல் செயற்பாட்டாளர் தீஷா ரவி கைது.

பிப் 18 – இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு.

பிப் 23 – சூழலியல் செயற்பாட்டாளர் தீஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மார் 2 – பஞ்சாப் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்திய சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவர் கைது.

மார் 5 – பஞ்சாப் சட்டமன்றத்தில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்.

மே 26 – விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்தது.

ஜுலை – டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போட்டி நாடாளுமன்றத்தை விவசாயிகள் தொடங்கினர்

ஆக 7 – விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆலோசனை.

ஆக 28 – ஹரியானாவின் கர்ணல் மாவட்டத்தில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

செப் 7 – அரசின் நடவடிக்கைக்கு எதிராக, விவசாயிகள் கர்ணல் சென்று போராட்டம் நடத்தினர்.

செப் 11 – விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து, ஹரியானா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அக் 4 – உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஷ்ராவின் வாகனம் மோதியதில் 4 விவசாயிகள் மரணம் அடைந்தனர்.

அக் 6 – ஆஷிஷ் மிஷ்ரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அக் 14 – ஆஷிஷ் மிஷ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.

நவ 17 – இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க, உச்ச நீதிமன்றம், ஒய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்தது.

நவ 17 – பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.

நவ 19 – மூன்று விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

நவ 19 – ”இது மன்னராட்சி அல்ல, பிரதமர் தொலைகாட்சியில் அறிவிப்பதால் நாங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பமாட்டோம், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கருத்து.

நவ 26 – விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கி ஒராண்டு நிறைவு.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்