Aran Sei

‘போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் பயிர்கள் விற்பனை’ – ராகேஷ் திகாயத்

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில், விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்பனை செய்வார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (மார்ச் 23), ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் கலந்துக்கொண்டு பேசிய ராகேஷ் திகாயத், “போராடும் விவசாயிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த முடியாது. விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில், விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்பனை செய்வார்கள். இதற்கு டெல்லியை நோக்கி பயணம் செய்ய எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்ட களத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு – விவசாய சங்கம் அறிவிப்பு

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான இப்போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளதாகவும், இதை வழி நடத்தி செல்வதற்கான பெரிய பொறுப்பு நம் இளைஞர்களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு இயற்றிய இம்மூன்று விவசாய சட்டங்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களை அகற்றிவிட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்க அனுமதியை அளிக்கிறது. இது விவசாயத் துறையிலும் உணவுப் பொருள் விற்பனையிலும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு வழி வகுக்கும் என்று அதை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நோக்கில்தான், ராகேஷ் திகாயத் பயிர்களை விவசாயிகள் நாடாளுமன்ற வளாகத்தில் விற்பனை செய்யும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்