Aran Sei

‘போராடுபவர்கள் விவசாயிகளே அல்ல; பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அக்ஷய்வர் லால் கோண்ட்

விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகைத் ஒரு கொள்ளைக்காரன்  என்று  உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான அக்ஷய்வர் லால் கோண்ட் கூறியுள்ளார்.

மேலும், விவசாயப் போராட்டத்திற்கு அயல்நாட்டிலிருந்து பணம் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக எண்ணற்ற விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அக்ஷய்வர் லால் கோண்ட், “திகைத் ஒரு   கொள்ளைக்காரன். இங்கு நடைபெறும் போராட்டம் விவசாயிகளால் நடைபெறவில்லை. போராட்டக்காரர்கள் விவசாயிகள் இல்லை. அவர்கள் பாகிஸ்தான் மற்றும் சீக்கிஸ்தான் என ஆதரிக்கக்கூடிய  அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் போரட்டத்திற்கு கனடா போன்ற நாடுகளில் இருந்து பணம் வருகிறது. இந்தப் பணம் தீவிரவாத இயக்கத்துக்காக வருகிறது. நிறுவனங்கள் இதனை விசாரித்து வருகின்றன” என்றும் கூறியுள்ளார்.

SOURCE:THE INDIAN EXPRESS  

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்