Aran Sei

மருத்துவமனையில் பணம் செலுத்த தாமதம்: அறுவை சிகிச்சை காயங்களை தைக்காமல் விட்ட மருத்துவர்கள்- சிறுமி பலி

த்தர பிரதேசத்தில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமியின் மருத்துவ கட்டணங்களைச் செலுத்த முடியாததால், அறுவை சிகிச்சை காயங்களைத் தைக்காமேலே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி மரணமடைந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, முகேஷ் மிஷ்ரா எனும் விவசாயக் கூலியின் மகளான மூன்று வயது குஷி மிஷ்ரா கடுமையான வயிற்று வலியால் யுனைடட் மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய குஷி மிஷ்ராவின் உறவைனர் சுரஜ் மிஷ்ரா, ”பிப்ரவரி 24 ஆம் தேதி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதிலும் வயிற்று வலி குணமாகவில்லை என்பதால், மார்ச் 3 ஆம் தேதி மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து நிலைமை மோசமாகிவிட்டது என்று மருத்துவர்கள் கூறியதால், நாங்கள் குஷி மிஷ்ராவை குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

“குழந்தைகள் நல மருத்துவமனையில் குஷி மிஷ்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமியின் கட்டுகளைத் திறந்து பார்த்தபோது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடங்கள் எதுவும் தைக்கப்படாமல் திறந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். அதன்பின்னர், நாங்கள் சிறுமியை ஆம்புலன்சில் வீட்டிற்கு அழைத்து வந்தோம், ஆனால் அவர் வலியால் மீண்டும் துடித்ததால்,  நாங்கள்  அவளை (5-3-21) மீண்டும் யுனைடெட் மெடிசிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு, நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் மருத்துவமனையின் பிரதான வாசலைப் பூட்டினர்.  நாங்கள் மருத்துவமனையின் வாசலுக்கு வெளியே சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தோம். அங்கேயே சிறுமி மரணமடைந்து விட்டார்” என்று கூறியுள்ளார்.

” லவ் ஜிகாதை தடுக்காமல் தூங்கும் கேரள அரசு ” : யோகி ஆதித்யநாத்

மருத்துவமனை இரண்டு அறுவை சிகிச்சைக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் கேட்டதாகவும், ஆனால் தங்கள் குடும்பத்தால் இரண்டு லட்சம் தான் முன் பணமாக கட்ட முடிந்ததாகவும் சுரஜ் கூறியுள்ளார். “ மீதமுள்ள பணத்தை செலுத்த நாங்கள் அவகாசம் கேட்டிருந்தோம். ஆனால் நாங்கள் பணம் செலுத்தாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட செய்யாமல் குழந்தையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

குஷி மிஷ்ராவின் குடும்பம் முன் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள யுனைடெட் மெடிசிட்டி மருத்துவமனை ”அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, நாங்கள் சிறுமியை அறுவை சிகிச்சை காயங்களைத் தைக்காமல் ஒப்படைக்கவில்லை” என கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தி தெரிவித்துள்ளது.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இந்தச் சிறுமியின் புகைப்படமும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்தச் சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

”ஒரு மைனர் சிறுமியைத் தனியார் மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து தைக்காத திறந்த வயிற்றுடன் அனுப்பியதாக வெளியான சமூக ஊடக பதிவை அறிந்த பின்னர் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரமான விஷயம், சிறுமியின் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

சிறுமியின் தந்தை முகேஷ் மிஸ்ராவின் புகாரின் அடிப்படையில், சிறுமியின் குடும்பம் வசிக்கும் கவுசாம்பி மாவட்டத்தின் காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 இன் கீழ் யுனெனைடட் மருத்துவமனையின் மருத்துவர் அங்கித் குப்தாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்

மருத்துவமனையின் உரிமையாளர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதால், புகாரை வாபஸ் பெற கூறி அழுத்தம் தரப்படுவதாக முகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்