Aran Sei

காவல்நிலையத்தில் புகாரளித்தவரின் மர்ம மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்கள்

பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில், கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில், மூன்று காவலர்க்ள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில், தீபு யாதவ், சவுரப் யாதவ், கோலு யாதவ் ஆகிய மூன்று பேர் 13 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணின் தந்தை, கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற பெண்: பாலியல் வன்புணர்வு செய்த துணை காவல் ஆய்வாளர்

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி, பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா ”பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுமி நலமாக இருக்கிறார். இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல் இரண்டு குற்றவாளிகளின் தந்தை (தீபு யாதவ், சவுரப் யாதவ்) கன்னோஜ் மாவட்டத்தின் (கான்பூருக்கு அருகில் இருக்கும் மாவட்டம்) துணை காவல் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு – மத்திய பிரதேசத்தில் பாஜக பிரமுகரை தேடும் காவல்துறை

இதையடுத்து தன்னுடைய பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கான்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்த பெண்ணின் தந்தை, நேற்றைய தினம் (10-3-21) லாரி மோதிய விபத்தில் மரணமடைந்தார்.

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

இது தொடர்பாக பேசிய கான்பூர் மாவட்ட்டத்தின் தலைமை காவல் அதிகாரி பீரிதிந்தர் சிங், ”அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தேநீர் அருந்துவதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பெண்ணின் தந்தை லாரி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய, மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், ”நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட, இந்தச் சம்பவத்தில் (கூட்டுப் பாலியல் வன்புணர்வு) ஈடுபட்டிருந்த நபரின் மூத்த சகோதரனால் கடுமையாக மிரட்டப்பட்டோம். என்னுடை தந்தை துணை காவல் ஆய்வாளர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அவர் மிரட்டியதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்

இந்தச் சம்பவத்திற்கு, காவல்துறையும் உடந்தை, என குற்றம் சாட்டிய குடும்ப உறுப்பினர்கள், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம், இந்தச் சம்பவத்தின் (லாரி மோதி விபத்து) முதற்கட்ட விசாரணையில், கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளதாக மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி பிரிதீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்