Aran Sei

‘எங்கள் உடலசைவைக் கூட கண்காணிக்கும் காவல்துறை முகாம் வேண்டாம்’ – முகாமை அகற்றக்கோரிய போராட்டத்தில் பழங்குடியினரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை

த்தீஸ்கர் மாநிலத்தில் புதிய காவல்துறை முகாமை அகற்றக்கோரி பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதை கண்டித்து அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுக்மா மற்றும் பிஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் பங்கேற்றுள்ள இப்போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு குறித்து உயர்மட்ட காவல்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நேற்று (மே 17) நடந்த பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு ஒருதலைபட்சமானது என்று பழங்குடி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மறுபுறம், இத்தாக்குதல் குறித்து கூறும் காவல்துறையினர், “சில்கரில் காவல்துறை முகாம் திறக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக நக்சல்கள் இருந்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கற்களை வீசியும் எங்கள் முகாமைத் தாக்கினர்.” என்று கூறியுள்ளனர்.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

இத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக, ஒரு பெண் உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

“நாங்கள் எங்கள் நிலத்தை ஒரு மருத்துவமனைக்கும் பள்ளிக்கூடத்திற்கும் முழு மனதுடன் கொடுத்திருப்போம். சாலை கட்டுமானத்திற்காக அவர்கள் பாதுக்காப்பு படையினரை குவிப்பதைக் கூட நாங்கள் பொருட்படுத்தாமல் இருந்தோம். ஆனால், காவல்துறையினரின் முகாம் எங்கள் நிலத்தில் வருவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் ஒவ்வொருவரின் உடலசைவு தொடங்கி எங்களது பழக்கவழக்கங்கள்வரை அனைத்தும் காவல்துறையின் கண்காணிப்பிற்கு உள்ளாகும். நக்சல்களுக்கும் காவல்துறைக்கும் பயந்து வாழ எங்களுக்கு விரும்பமில்லை.” என்று காவல்துறையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களின் ஒருவரான சுனில் கொர்சா தெரிவித்துள்ளார்.

Source; thewire, indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்