Aran Sei

இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள் – ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றுள்ளதாக புகார்

வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று  மீனவர்கள் இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, நேற்று  செப்டம்பர் 24 அன்று, சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான படகில் சிவகுமார், சிவா,அவரது தந்தை சின்னத்தம்பி ஆகியோர் வேதாரண்யத்திலிருந்து தென் கிழக்கில் சர்வதேசக் கடல் பகுதியில் மீன்பிடிக்கத் கொண்டிருந்த நிலையில், இரண்டு பைபர் படகுகளில் வந்த 1௦ இலங்கை மீனவர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர்.

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தாருங்கள்’ – ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

மேலும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி சிவகுமாரைக் கத்தியாலும், சிவாவும், சின்னத்தம்பியும் இரும்பு கம்பியாலும் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மீன்பிடி வலை, ஜி.பி.எஸ் கருவி உட்பட ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை வேதாரண்யம் கரைப்பகுதிக்கு திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வேண்டுகோள்

இதனைதொடர்ந்து இவர்களைச் சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இந்தச் சம்பவம்  இந்திய கடலோர காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழு ஆகியோர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்