Aran Sei

இஸ்லாமிய பழ வியாபாரிகளை புறக்கணிக்க கோரிய இந்துத்துவா தலைவர் – வழக்கு பதியாத பெங்களூரு காவல்துறை

Credit: The Wire

“பெங்களூருவில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களின் ஏக போகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்து வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.” என்று இந்து ஜனஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகர் தெரிவித்துள்ளார்.

ஹலால் இறைச்சியைத் தடை செய்ய வேண்டும், மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து இஸ்லாமியர்களை இந்துத்துவா கும்பல் குறிவைத்து வரும் நிலையில், இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும் வகையில் மோகரின் அழைப்பு வந்துள்ளது.

‘ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அரசியல் திட்டம் நிறைவேறாது’ – திரிணாமூல் காங்கிரஸ்

மோகர் இந்த கருத்தை தெரிவித்து மூன்று நாட்கள் ஆன பிறகும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை.

இஸ்லாமியர்கள் பழங்கள் மற்றும் பிரட்களை விற்கும் முன் அதை ரோட்டில் கொட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள மோகர், “பழ வியாபாரத்தில், இஸ்லாமியர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து இந்துக்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோகரின் அழைப்பிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, “இஸ்லாமியர்களிடம் இருந்து பழங்களை வாங்க கூடாது என்று இந்துத்துவ தலைவர் கூறுவது நாட்டிற்கும் விவசாயத்திற்கும் செய்யும் துரோகம்” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

“இஸ்லாமியர்களிடம் இருந்து பழங்களை வாங்க கூடாது என்று மக்களை கேட்பது தேச துரோகம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது. இந்து விவசாயிகளுக்கு உதவுதற்கு தான் அவர்களிடம் இருந்து பழங்களை இஸ்லாமிய வியாபாரிகள் வாங்குகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோகரின் மீது காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாததைத் தொடர்ந்து, ஏஐஎம்ஐஎம் கட்சியின் பெங்களூரு செய்தி தொடர்பாளரும் கர்நாடகா பண்டுவா முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஷேக் ஜியா நோமானி, சஞ்சய் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு சமூகத்தை இழிவுபடுத்தியதற்காகவும் , வகுப்புவாதம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் இந்து ஜனஜக்ருதி சம்தி ஒருங்கிணைப்பாளர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு அவர் கோரியிருந்தார்.

‘தேசிய ஒருமைப்பாட்டிற்கு வகுப்புவாதம்  ஓர் அச்சுறுத்தல்’ என்று கூறிய நோமானி, இது போன்ற கருத்துக்கள் மத அடிப்படைவாதத்தையும் வெறுப்புணர்வையும் வளர்க்கின்றன. இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவை” என்று கூறியுள்ளார்.

நீதிபதிகளை அரசுகள் இழிவுபடுத்தும் போக்கு துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

புகாரின் நகலை பெங்களூரு பெருநகர காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள நோமானி, “இஸ்லாமியர்களை குறிவைத்து பொய்யாக குற்றம் சாட்டியுள்ள மோகரின் கருத்து, மாநிலம் மற்றும் தேசத்தின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் திட்டமிட்டு சொல்லப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது குறீப்பிடத்தக்கது.  

Source: The Wire

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்