Aran Sei

பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு – முடிவை ஒத்திவைத்த மங்களூரு கல்லூரி நிர்வாகம்

ங்களூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான தூய அலோசியஸ் கல்லூரியில் பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைக்க வலது சாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முடிவை ஒத்திவைத்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்பணித்த ஸ்டான் சுவாமியைக் கௌரவிக்கும் விதமாக, கல்லூரியில் உள்ள பூங்காவிற்கு அவரது பெயரை வைக்க விரும்வதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

‘மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்’ – கமல்ஹாசன்

ஸ்டான் சுவாமியை ‘அர்பன் நக்சல்’ என்ற முத்திரை குத்தும் வலது சாரி அமைப்புகள், அவரது பெயரைப் பூங்காவிற்கு வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஸ்டான் சுவாமி என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.

பார்கின்சன் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உபா சட்டத்தின் விதிகளை காரணம் காட்டி பலமுறை பிணை மறுக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமி, ஜுலை 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

தூய அலோசியஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியும் மங்களூரு ஜெசூட் சபையினர் கல்வி சங்கத்தின் துணைத் தலைவருமான மெல்வின் ஜோசப் பிண்டோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். தற்போதையை சூழ்நிலையில் பூங்காவிற்கு ஸ்டான் சுவாமி பெயர் வைப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய இணையமச்சரின் மகன் – 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது

விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்