Aran Sei

சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு

சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துவதாகவும், மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியைக் கொண்டாடுவதாகவும் பாஜக  மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு – கைது செய்ய தடை விதித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர். அதனால் என்ன பயன் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்பின் தவறான கொள்கையால் நாடு எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டின் அனைத்து தரப்பினரிடையே வெறுப்பு பேச்சுக்களை பாஜக அரசு பரப்பி வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடையே அச்சத்தை பரப்பி வருகிறது.

டெல்லி: வங்கதேச சுற்றுலாப் பயணிகளை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டும் காணொளிகளை பகிர்ந்த பாஜக தலைவர்கள்

சாமான்ய மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்திப் பிளவுபடுத்த பாஜக அரசு முயற்சி செய்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  குற்றம்சாட்டியுள்ளார்.

Source: newindianexpress, zeenews
மானங்கெட்டவன் தான் பல்லக்கு தூக்குவான் Dr Kantharaj Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்