Aran Sei

ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிரட்டல் – வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் பரிசீலனை

த்ராஸ் மாவட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு  வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞரால் மிரட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, நீதிமன்றம் இதைத் தெரிவித்துள்ளது.

மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் தருண் ஹரி சர்மா கத்தியைக் காட்டி மிரட்டியதாக அந்தப் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை காலக்கட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு மதிப்பூதியம் – இமாச்சல் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்ககை தொடர்ந்து அங்கேயே நடத்தலாமா அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா என பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

எந்த விதமான இடையூறும் இல்லாமல், சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்துவதை உறுதி செய்யுமாறு ஹத்ராஸ் மாவட்ட நீதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக உயிருக்கு உத்திரவாதம் இல்லாததை அடுத்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா அச்சப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்