Aran Sei

குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மோதல் – புகாரளித்த இஸ்லாமிய இளைஞரின் முதுகெலும்பை உடைத்ததாக காவல்துறை மீது புகார்

டெல்லியின் சத்தர்ப்பூர் பகுதியில் குடியிருப்பில் ஏற்பட்ட சண்டையைத் தடுக்க காவல்துறை உதவி எண்ணிற்கு அழைத்ததற்காக வாசிம் கான் என்ற இளைஞரை, காவல்துறையினர் தாக்கியதில் அவரின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது  தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் கானின் உறவினர் அகமது அலி, ”மே 17 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வாசிம் வீட்டின் வெளியே இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பலரும் சண்டையில் ஈடுபட்டவுடன், சண்டை மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர்” என தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சண்டையை முடிவிற்கு கொண்டு வர வாசிம் உள்பட அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் காவல்துறைக்கு உதவி எண்ணான 100ஐ தொடர்புக் கொண்டனர் என வாசின் கான் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்” – அலுவலகம் கூட இல்லை என்பது ஆய்வில் அம்பலம்

சம்பவ இடத்திற்கு 10 மணிக்கு வந்து கூட்டத்தைக் கலைத்த ஃபதேபூர் பேரி காவல்நிலைய காவல்துறையினர், இரவு 11.30 மணியளவில், வாசிம் கானின் வீட்டிற்கு சென்று, கலவரத்தை நேரில் பார்த்த சாட்சியாக வாக்குமூலம் அளிக்கக் காவல்நிலையம் வருமாறு அழைத்துச் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”உதவி எண்ணை அழைத்த மூவர் உட்பட ஆறு இஸ்லாமியர்களை அழைத்த காவல்துறையினர், சண்டைகுறித்த அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறினர். இரவு மிகவும் தாமதமாகிவிட்ட நிலையிலும், நாங்கள் சென்றோம்” என வாசிம் தெரிவித்திருப்பதாக தி வயர் கூறியுள்ளது.

‘ஆத்திரமூட்டும் கருத்துகளை தெரிவிக்க கூடாது’ – பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு

இது தொடர்பாக நடுங்கிய குரலுடன் பேசிய கான், “அவர்களை என்னைத் தனியே அழைத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். அவர்களது லத்திகளால் அடிக்கத் தொடங்கினர். துணை ஆய்வாளர் சதேந்தர் குலியா, அவரது முழங்கைகளால் என்னை அடித்து, என் முதுகில் லத்தியால் அடித்தார். பிரவீன் மற்றும் ஜிதேந்தர் என்ற இரு காவலர்களும் என்னை எட்டி உதைத்து தலைகீழாக பிடித்தனர்” என கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகுப்புவாத மற்றும் இஸ்லாமியர் விரோத சொற்களால் வசை பாடிய காவலர்கள், எங்களை இரவு 2.30 மணிக்கு வெளியே விட்டனர் என கான் குறிப்பிட்டதாக தி வயர் கூறியுள்ளது.

காவல்துறையினர் தாக்கியதால் வாசிம் கானின் முதுகில் வலி அதிகமாக இருந்ததை தொடர்ந்து, அவரை வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள மருத்துமனையில் அவரது மாமா அனுமதித்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனிதஉரிமை ஆணைய தலைவராக அருண் மிஸ்ரா நியமனம்: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவென எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சனம்

”வாசிம் கானை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு முதுகெலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் எல்3 மற்றும் எல் 4 அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தி வயர் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வசந்த் குஞ்ச் காவல்நிலையித்தில் புகார் தெரிவிக்க சென்றபோது அவர்கள் இது தங்கள் காவல் எல்லை இல்லை என புகார் எடுக்க மறுத்து விட்டனர். பிறகு கெஞ்சி கேட்டுக் கொண்டதை அடுத்து, வழக்கு மட்டும் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என கானின் உறவினர் அகமது அலி தெரிவித்தததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்