Aran Sei

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வேலை நிறுத்தம் : ஆயிரக்கணக்கானோர் இடைநீக்கம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆசிரியர்கள் குழு ஒன்று ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.

“நான் மிகவும் மதிக்கும் என் பணி பறிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். அதேநேரம், அநீதிக்கு எதிராக போராடுவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய துறையில் இருந்து நான் நீக்கப்படுவதாக அறிவித்தார்கள். நாங்கள் இராணுவ ஆட்சியின் உத்தரவுகளை பின்பற்ற மாட்டோம்.” என்று 37 வயதான பல்கலைக்கழக பேராசிரியர் கூறியுள்ளார். ஆனால், தான் மேலும் பழிவாங்கபடலாம் என்பதால் தனது பெயரை முழுதாக கூறவில்லை.

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்த இராணுவம்

நேற்றைய (மே 10) நிலவரப்படி, 11,100 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் ஆசிரியர்கள் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரும் தான் பழிவாங்கப்படலாம் என்பதால், தன் பெயரைக் கூற மறுத்துள்ளார்.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க மறுத்த இராணுவம், ஆட்சியை கைபற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் போன்ற முக்கியத் தலைவர்களை இராணுவம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

Source : Reuters, The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்