Aran Sei

விவசாயிகளை குண்டர்கள், பயங்கரவாதிகள் என வசைபாடியவர்கள் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர் – பிரியங்கா காந்தி

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி போராடிய விவசாயிகளை குண்டர்கள், பயங்கரவாதிகள், துரோகிகள் என விமர்சித்தவர்கள் தற்போது தேர்தலுக்காக அந்த சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இம்முடிவுக்கு மாநில முதலமைச்சர்கள், விவசாய சங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

‘விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி’ – திருமாவளவன்

சட்டம் திரும்பப்பெற்றது குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ”விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. 3 விவசாயச் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விவசாயிகளை  குண்டர்கள், பயங்கரவாதிகள், துரோகிகள் என்று பாஜக தலைவர்கள் வசைபாடினர். 350 நாட்கள் விவசாயிகளின் போராட்டம். உங்கள் அமைச்சரின் மகன் விவசாயிகளை வாகனத்தால் நசுக்கி கொன்றார். அது குறித்து உங்களுக்கு அக்கறை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அந்தோலன்ஜீவி, இப்படியெல்லாம் விவசாயிகளை யார் அழைத்தது. இதையெல்லாம் பேசும் போது பிரதமர் மவுனம் காத்தது ஏன். அந்தோலன்ஜீவி என்ற வார்த்தையை அவரே உச்சரித்தார்.

‘வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவு சந்தர்ப்பவாத நடவடிக்கை; அரசியல் உள்நோக்கத்துடையது’- கே.எஸ். அழகிரி

துன்பப்படும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது யாரால்? விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று நீக்கப்படும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் உங்களை எப்படி நம்புவது? இந்த நாட்டில் விவசாயிகளை விட பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை அரசு புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களே மேலோங்கும் – மு.க.ஸ்டாலின்

ஏன் இப்படி செய்கிறார்கள்? தேர்தல் நெருங்கி வருவதை தேசம் புரிந்து கொண்டுள்ளது. இதனை அவர்களும் உணர்ந்திருக்கலாம். நிலைமை சரியில்லை என்பதை அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பார்க்க முடிகிறது. எனவே, தேர்தலுக்கு முன்பாக மன்னிப்பு கேட்க வந்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்