Aran Sei

‘லிவிங் டூ கெதர் இணையர்கள் குடும்பநல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை’ – சென்னை உயர்நீதிமன்றம்

Image Credits: The Hindu

திருமணம் செய்யாமல்  இணைந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013-ல் திருமணம் செய்ததாகவும், 2016 முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்து வைக்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதால், அவரது வழக்கை நிராகரிக்கக்கோரி ஜோசப் பேபியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குஜராத்தில் மசூதியை இடிக்க அழுத்தம் கொடுத்த பாஜகவினர் – பதவியை ராஜினாமா செய்த அதிகாரி

இதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்