Aran Sei

அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூகத்தில் கசப்புணர்வை பரப்ப முயற்சிக்கிறார்கள் – தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

Image Credits: DNA India

மூகத்தில் கசப்புணர்வை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வதும், நல்லிணக்கத்தை பேணுவதும் சவாலாக உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல் என்பது மக்களை இணைக்கும் வகையில் இருந்தது. ஆனால், தற்போது நாட்டில் மதத்தின் அடிப்படையில் பிரிவினைகளை மேற்கொள்ள முயற்சிகள் நடக்கிறது. தேசத் தந்தை காந்தி போன்ற தேசிய சின்னங்களை அவதூறு செய்யவும் முயற்கிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், பாஜக ஆளூம் கர்நாடகாவில், சிறுபான்மையினர் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது என சில அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன. மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களால் இது போன்ற கசப்புணர்வு பரப்படுகிறது. நாட்டை எப்படி முன்னேற்றுவது, மத நல்லிணக்கத்தை எப்படி பாதுகாப்பது?” என்று சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவெறிக்கு எதிராக நாங்கள் போராட விரும்புகிறோம். வளர்ச்சிக்கான அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவாரை நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்