Aran Sei

‘கோல்மால் பட்ஜெட்’ – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமர்சனம்

ட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர், விவசாயிகள், மாத சம்பளம் பெறுவோர் உட்பட பலருக்கும் பாஜக அரசின் இந்த பட்ஜெட் ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது என்று டிஆர்எஸ் கட்சித் தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

“சாமானிய மக்களுக்குத் துக்கத்தைப் பரிசளித்து விட்டு இந்த பட்ஜெட்டில் தன்னை தானே ஒன்றிய அரசு புகழ்ந்து கொண்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் ஏமாற்று வார்த்தைகளைத் தவிர வேறெதுமேயில்லை என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பயனற்ற, நோக்கமற்ற இந்த கோல்மால் பட்ஜெட் எந்த உண்மைகளையும் நமக்குக் கூறவில்லை. இந்த பட்ஜெட் விவசாயத் துறையைப் பொறுத்தவரைப் பெரிய பூஜ்யம் ஏனெனில் எந்த நிதியுதவியும் அதற்கு வழங்கப்படவில்லை என்று இந்த சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

“இந்த பட்ஜெட்டில் கைத்தறி துறைக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மாத சம்பளம் பெறுவோர், சிறு வணிகர்களுக்கு பட்ஜெட் அறிவிப்புகள் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், கொரோனா தொற்றுநோயின் போது கூட​​​​ சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு சிந்திக்காமல் இருப்பது கவலைக்குரியது” என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்