Aran Sei

‘சிபிஐக்கு புதிய அதிகாரம்’ – தனி சட்டம் இயற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

த்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ‘கூண்டுக் கிளி’ போல செயல்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சிபிஐ செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசிற்கு எதிராக ராமநாதபுரம் பாதிக்கப்பட்டோர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் பி. புகழேந்தி அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பல முக்கிய வழக்குகளில் சிபிஐ விசாரணை கோரப்பட்டாலும், சிபிஐ அதன் அந்தஸ்தை இழக்க வாய்ப்புள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிபிஐக்கு சட்டப்பூர்வமாக தனி அந்தஸ்து வழங்க விரைவில் ஒரு தனி சட்டத்தை இயற்றத்தை வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தற்போது சிபிஐ அதன் அதிகாரத்தை, 1946 ஆம் ஆண்டு தில்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபனச் சட்டத்தில் இருந்து பெறுகிறது, மேலும் சிபிஐயின் செல்லுபடியாகும் தன்மை உச்சநீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணை முகமையுடன் இணைக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் மரியாதை காரணமாக, முக்கிய மற்றும் கொடூரமான வழக்குகளில் சிபிஐ விசாரணைகளுக்கான கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்