Aran Sei

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இதுவே தருணம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது மைனர் பெண்ணைக் கடத்தி திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு   வழக்கு தொடரப்பட்டது. தற்போது திருமண வயதை எட்டியுள்ள அந்தப் பெண்ணுக்கு, இந்த வழக்கால் திருமணம் பாதிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் தாய் மற்றும் அந்த மைனர் பெண், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

போக்சோ சட்டத்தால் பெண்ணின் திருமணம் பாதிக்கப்படுவதால் ஆட்டோ டிரைவருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் ‘‘காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டதத்தால் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். இதனால் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம்’’ எனச் சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை, பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும் மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று நீதிபதி புஷ்பா கனடிவாலா தீர்ப்பளித்திருந்தார். அவர் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே தலைமையிலான அமர்வுத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

மேலும், அதே நாக்பூர் பெஞ்ச், மைனர் பெண்ணின் கைகளைப் பிடிப்பது, மைனர் பெண்ணின் முன்னாள் ஜிப்பை அவிழ்ப்பது போன்றவை போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனத் தெரிவித்திருந்தது. இந்தக் கருத்துகள் சர்ச்சையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்