Aran Sei

திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம் – விதிகளை மீறியதாக டிவிட்டர் நிறுவனம் தகவல்

மே பதினேழு இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளரும், செயல்பாட்டாளருமான திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4 ஆம் தேதி, புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டு “இதைப்பற்றி நாம் ஏன் பேசுவதில்லை?” என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், திரைத்துறை கலைஞர் மியாக கலிஃபா உள்ளிட்ட பல பிரபலங்கள், டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த இந்திய வெளியுறுத்துறை அமைச்சகம், விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.

வெளியுறவுத்துறையின் இந்த அறிப்பை தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர், கங்கனா ரணாவத், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான் போன்ற இந்திய பிரபலங்களும், விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

விவசாயிகள் போராட்டம்: அரசாங்கம் சொல்வதை டிவிட்டர் நிறுவனம் கேட்க வேண்டும் – மத்திய அரசு எச்சரிக்கை

இந்நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி, திருமுருகன் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “பிரதமர் நரேந்திரமோடி, விளையாட்டு வீரர்களுடனும், பாலிவுட் நட்சத்திரங்களுடனும் ஏன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் என்பது இப்போது இந்திய மக்களுக்கு புரியும். உண்மையான பிரச்சனையிலிருந்து இந்திய மக்களை திசை திருப்ப அவர்கள் இருவரும் (விளையாட்டு வீர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள்) பயன்படுத்தப்படுகிறார்கள். நம்முடைய உரிமை பறிக்கப்படும் போது நாம் அனைவரும் கைதட்டிக்கொண்டும், அழுதுகொண்டும் இருந்தோம். நாம் இப்போது கங்கனா (ரணாவத்) மற்றும் சச்சினுடைய (டெண்டுல்கர்) துரோகத்தை அனுபவிக்கிறோம். விவசாயிகளும், தொழிலாளர்களுமே உண்மையான நட்சத்திரங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

திருமுகன் காந்தி டிவிட்டர் பதிவின் நகல்

 

இந்நிலையில், செவ்வாய் கிழமையன்று (09.02.21) திருமுருகனின் டிவிட்டர் கணக்கு (@thiruja) திடீரென முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டரின் விதிகளை மீறியதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமுருகனின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து, #unblocktmg என்ற ஹாஷ் டேக்கில், பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன், விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க, வெளிநாட்டைச் சேர்ந்த சக்திகள் சதி செய்வதாக, பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியது.

டிவிட்டர் தளத்தில் அவ்வாறு 1,178 கணக்குகள் செயல்படுகின்றன என்றும், அவை பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனவும், பாகிஸ்தானின் பின்னணியிலிருந்து அவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியது.

என் டிவிட்டர் பதிவுகள் மறைக்கப்படுகின்றன – டிவிட்டர் நிறுவனம் மீது நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

இந்த டிவிட்டர் கணக்குகள், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்றும், பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார குழுக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறது என்றும் அரசு குற்றம் சாட்டியது.

ஆகவே, அந்த கணக்குகள் அனைத்தையும் முடக்குமாறு மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தாத டிவிட்டர் நிறுவனம், இதுகுறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் “இப்போது நான் கூ-வில் உள்ளேன். பிரத்யேக மற்றும் உற்சாகமூட்டும் தகவல்களை பெற, இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த குறும்பதிவிற்கான தளத்தில் என்னுடன் இணையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு, பொருளாதார முதன்மை ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், “விரைவில் உங்களை அங்கே சந்திக்கிறேன்…” என்று பதில் அளித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்துக்கு ஏற்கனவே கூ தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. மறைமுக வரிக்கான மத்திய வாரியம் மற்றும் சுங்கத்துறைக்கும் கூ தளத்தில் கணக்கு உள்ளது.

கடந்த ஆண்டு, ஆத்மநிர்பார் சிறந்த செயலிகளுக்கான போட்டியில், ‘கூ’ தளமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்