தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை தரமறுத்து வேறு இடத்திற்கு அனுப்பும் மோடி அரசின் போக்கு தமிழின விரோதமானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை வேறு இடத்திற்கு அனுப்புகிறது மோடி அரசு
தமிழகத்திற்கான நிதி பங்கை தர மறுக்கிறது
கொரொனோ மருந்துக்கான வரியை ரத்து செய்யமறுக்கிறது
நீட் மூலம் நம் மாணவர்களின் மருத்துவ படிப்பை தடுக்கிறது
OBCக்கான 10,000 டாக்டர் சீட்டுகளை பிறருக்கு கொடுத்தது
தமிழின விரோதம்
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) April 21, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,”தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை வேறு இடத்திற்கு அனுப்புகிறது மோடி அரசு.தமிழகத்திற்கான நிதி பங்கைத் தர மறுக்கிறது. கொரொனோ மருந்துக்கான வரியை ரத்து செய்யமறுக்கிறது. நீட் மூலம் நம் மாணவர்களின் மருத்துவ படிப்பைத் தடுக்கிறது. OBCக்கான 10,000 டாக்டர் சீட்டுகளைப் பிறருக்கு கொடுத்தது தமிழின விரோதம்” என்று பதிவிட்டுள்ளார்.
இத்தனை சாவு நடந்து கொண்டிருக்கும் காலத்திலும் மோடி அரசு கொரொனோவிலிருந்து காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்கவுமில்லை, ரத்து செய்யவுமில்லை
2019லிருந்து ஜி.எஸ்.டியில் மாநிலங்களுக்கு தரவேண்டிய பங்கினை தரவுமில்லை
ஆனால் நோயை தடுப்பது மாநிலத்தின் பொறுப்பு என்கிறார் மோடி.
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) April 19, 2021
மேலும் கொரோனா இரண்டாம் அலையில் மத்திய அரசின் நடவடிக்கைகுறித்து, “இத்தனை சாவு நடந்து கொண்டிருக்கும் காலத்திலும் மோடி அரசு கொரொனோவிலிருந்து காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கவுமில்லை, ரத்து செய்யவுமில்லை. 2019லிருந்து ஜி.எஸ்.டியில் மாநிலங்களுக்குத் தரவேண்டிய பங்கினை தரவுமில்லை. ஆனால், நோயைத் தடுப்பது மாநிலத்தின் பொறுப்பு என்கிறார் மோடி”. என்று தனது ட்விட்டர் பதிவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.