Aran Sei

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மோடி பதவியேற்ற நாளை கறுப்புநாளாகக் கடைபிடிப்போம்’ – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமாவளவன் அறிவிப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லையெனினும், அவரது கொள்கை வாரிசாகவும் தமிழக முதல்வராகவும் இருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவையும் தமிழக அரசையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அரசியல் பகைவரும் அகம் நெகி்ழ்ந்து பாராட்டும் வகையில், அவர் இன்று ஆட்சிநிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மிகவும் சிறப்பாக, திறம்பட செயல்பட்டு வருகிறார்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

‘புதுச்சேரி முதல்வர் மருத்துவமனையில் இருக்க, கொல்லைப்புறமாக ஆட்சியமைக்க பாஜக சதி’ – திருமாவளவன்

மேலும், அத்தகைய பாராட்டுக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த கலைஞர் அவர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்தநாளான சூன்-03 அன்று, பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டிருப்போர் யாவரையும் மாந்தநேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்று காரணமாக சிறைவாசிகளை உடனே விடுதலை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும், கலைஞர் சிறை நிர்வாக சீர்திருத்தம், சிறைவாசிகளின் நலன்கள், சிறைத்துறையினரின் உரிமைகள் போன்றவற்றில் முற்போக்கான அணுகுமுறை கொண்டவர் என்றும் திருமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

எனவே, “முதல்வர் அவர்கள், கலைஞரி்ன் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேல் தங்களின் தண்டனைக் காலத்தைக் கழித்துள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற கைதிகள், அத்துடன், வயது மூப்படைந்தோர், கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டோர், வழக்குகளை நடத்த பொருளாதார வலிமையின்றி பல ஆண்டுகளாக உள்ளேயே கிடக்கும் விசாரணைக் கைதிகள், பெண் கைதிகள் போன்றோரையும்; பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுதமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப்போற்றும் வகையில், அவரது பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டுமெனவும்” விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்