Aran Sei

சாதி அடிப்படையில் சிறைக்கைதிகளை அடைத்து வைப்பதை தடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

thirumavalavan

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும்  தடுக்க சிசிடிவி கேமாராக்களை பொருத்த வேண்டும் என்றும் சாதி அடிப்படையில் கைதிகளை அடைத்து வைக்கும் போக்குகளைத் தடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் முனைவர். திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “சிறைத்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்துச் சிறைத்துறை தலைவராக(DGP) நியமிக்க வேண்டும். காவல்துறையிலிருந்து தலைவரை நியமிக்கும் போக்குகளால் சிறைத்துறை அதிகாரிகளுக்கான பதவிஉயர்வு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து சிறைத்துறையை விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”கிளைச் சிறைகளில் கண்காணிப்பு சிசிடிவி காமிராக்களைப் பொருத்த வேண்டும். சிறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மைய சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளை அடைத்து வைக்கும் போக்குகளைத் தடுக்க வேண்டும்” என்றும் தமிழ்நாடு அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்