Aran Sei

டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க சனாதன கொள்கை கொண்ட பாஜகவுக்கு அருகதை இல்லை – திருமாவளவன்

புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை
(11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன்.அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர்.

ஜெய்பீம் 2.0: டாக்டர் அம்பேத்கர் நூல்களை 50 தொகுதிகளாக வெளியிடும் விசிக – திருமாவளவன் தகவல்

எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

******************                               **********************                      ****************************

பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட வந்த விசிகவினருக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து விளக்குகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் சங்கத் தமிழன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்