பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்கி சமூகநலப்பள்ளிகள் என பெயர்மாற்றம் செய்திட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில்,”ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும்,மாணவர் விடுதிகளும் நடத்தப்படுகின்றன.அவற்றின் பெயரில் உள்ள ஆதிதிராவிடர் என்கிற முன்னொட்டு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது”. என்று கூறியுள்ளார்.
எனவே, பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்கி சமூகநலப்பள்ளிகள் என பெயர்மாற்றம் செய்திட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளை தமிழக அரசின் கீழ் கொண்டுவர வேண்டுமெனவும் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று அவர் மேலும் மூன்று கோரிக்கைகளையும் தனித்தனி மனுக்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தள்ளார்.
அதில், பட்டியலினம் மற்றும் பழங்குடியினப் பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவு தொனிக்கும்விதமாக ‘ன்’ விகுதியில் முடிவதை மாற்றி ‘ர்’ விகுதியில் முடியுமாறு ஆக்கப்பட வேண்டும் என்றும், தாட்கோ கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கவேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சென்னையின் ஆற்றின் கரையோரம் வசித்த மக்களை அகற்றிவிட்டு புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் வழங்கப்பட்ட குடியிருப்புகள் தொட்டாலே உடைந்து விழும் அளவுக்கு மிகவும் தரமற்றதாகவும்,மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலா கவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த குழுவின் அறிக்கை வரும்வரை குடியமர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமான? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?
இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.