Aran Sei

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள தலைமைச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் அறிக்கை

மிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில் தலைமைச் செயலாளர் கொரோனாவை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா முதல் அலையின்போது அதை சமாளிப்பதற்கான, அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. அதனால் மாநில அரசுகள் கொரோனா சோதனைக் கருவிகளைக்கூட நேரடியாக வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன என்க் கூறியுள்ளார்.

‘கொரோனாவால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்பலிகள்; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

இந்நிலையில், நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், மாநில அரசுகளே இனி நேரடியாக மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, தமிழகத்துக்குத் தேவையான கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் , தடுப்பூசிகள் ஆகியவற்றை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுபடவேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ,இதில் தாமதம் ஏற்படுமானால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும், கொரோனா தாக்குதலின் உச்சம் மே மாதத்தில் அதிகமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்கு இம்மாத இறுதிக்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவது அவசியமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மனிதநேய உணர்வோடு ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி – திருமாவளவன்

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக அந்த வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளதாகவும் திருமாவளவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் வரும் மே 18 முதல் வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் தடுப்பூசி தேவை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சோகனூர் சாதியப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி நிவாரணம் வேண்டும் – அரசிடம் கோரிக்கை விடுத்த திருமாவளவன்

எனவே, தமிழக மக்களைக் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்,  சுகாதார அவசரநிலை நிலவும் இந்த இக்கட்டான காலத்தில் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி   இடைக்கால அரசின் தலைமைச் செயலாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்