Aran Sei

‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்?’ – திருமாவளவன் கேள்வி

ன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ், எப்படி 10.5 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்டார் என்றும் அப்படி என்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா அவர் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 27), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.

இரண்டரை கோடி வன்னியர்களை அடகு வைத்தது பாமக : காடுவெட்டி குரு மகன் கனலரசன்

அப்போது, செய்தியாளர்களிடம் பேசி அவர், “1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் மட்டுமே சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழவே இல்லை. ஒருவேளை, 10.5 சதவீதம் வன்னியர்கள் இருக்கிறார்கள் என்றால், 1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகத்தான் இருக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள் இதுக்கீடு கேட்டவர் எப்படி 10.5 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்டார் என்றும் அப்படி என்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்று ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும்என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்