Aran Sei

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணி’ தேவை: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணியை’ ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் முன்னாள் துணைப் பிரதமரான மறைந்த சவுத்ரி தேவி லாலின் 109-வது பிறந்த நாளைக் குறிக்கும் பேரணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் உரையாற்றிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், “தனக்கு தனிப்பட்ட ஆசைகள் என்று எதுவும் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மேலும் மேலும் பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் உண்மையில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது கூட பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக இஸ்லாமியர்கள் இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

Source : the hindu

kallakurichi Sakthi school student case | The consequence | Student Affected | Villavan Ramadoss

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்