Aran Sei

என்.எஸ்.ஓ குழுமத்துடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை – மாநிலங்களவையில் கேட்டப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு துறை இணையமைச்சர் பதில்

ன்.எஸ்.ஒ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜர் பட் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் வி. சிவதாசன் எழுப்பிக் கேள்விக்கு அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இதனை கூறியுள்ளார்.

”அ) 2018-19, 2019-20, 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கைகளில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்?

ஆ) மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கிய நிதியின் விழுக்காடு

இ) மேற்கூறிய நிதியாண்டுகளில் பாதுகாப்புத் துறை செலவழித்த தொகை

ஈ) கடந்த மூன்று நிதியாண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்புத்துறை செலவழித்த தொகை

உ) என்.எஸ்.ஓ குழுமத்துடன் அரசாங்கம் ஏதேனும் பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளதா?

ஊ) பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தால் அதன் விவரங்கள்” ஆகிய கேள்விகளை மருத்துவர் வி. சிவதாசன் எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட், “என்.எஸ்.ஒ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த மூன்று நிதியாண்டுகளில் முறையே 4,04,364.71, 4,31,010.79, 4,71,378.00 கோடிகள் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்