வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை. வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உணர்வுகளை தூண்டுவதற்காக இவ்வாறு பரப்பப்படுகிறது என்று சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த சூழ்நிலைகள் அனைத்தும் 2024 தேர்தலின் காரணமாக உருவாக்கப்படுகின்றன. நீங்கள் வரலாற்றை ஆராய்ந்தால், கியான்வாபி மசூதியில், ‘சிவலிங்கம்’ இல்லை. வேறு எதுவும் இல்லை. சொல்லப்படுவது எல்லாம் தவறானது.” என்று கூறியுள்ளார்.
“அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டாலும், அங்கு மசூதி இருப்பதாக தான் நான் இன்னும் கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“யே தகத் கே பால்-பூட் பே ஹோ ரஹா (இது முற்றிலும் அதிகாரத்தின் வெளிப்பாடு)நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். மசூதிகள் தாக்கப்படுகின்றன. அரசாங்கம் இப்படி இயங்காது. நேர்மையுடனும், சட்டத்தின் ஆட்சியுடனும் அரசு இயங்க வேண்டும். புல்டோசரின் விதி உள்ளது, சட்டம் அல்ல.” என்று அவர் கூறியுள்ளார்.
Source: The Hindu
மதவெறி பிடித்து அலையும் சங்கி கும்பல் Madukkur Ramalingam | Gyanvapi Masjid | Shivling in Mosque| UP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.