Aran Sei

பட்டியல் மற்றும் பழங்குடி விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை – ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் கருத்து

பட்டியல் மற்றும் பழங்குடிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய  எவ்வித எண்ணமும் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றிய நிதித்துறை  இணை அமைச்சர் பாகவத் கராத் மக்களவையில் தெரிவித்துள்ள பதிலில், “விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம் (ADWDRS), 2008 ஆம் ஆண்டு  செயல்படுத்தப்பட்டதிலிருந்து ஒன்றிய அரசு எவ்வித கடன் தள்ளுபடி திட்டத்தையும்  செயல்படுத்தவில்லை” என்று  தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும், “நாடு முழுவதும் உள்ள  பட்டியல் மற்றும்  பழங்குடியின விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து ஒன்றிய அரசு எவ்வித பரிசீலனையிலும் ஈடுபடவில்லை”  என்று கூறியுள்ளார்.

ஆனாலும், பட்டியல் மற்றும்  பழங்குடிகள்  உள்ளிட்ட விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவும், விவசாயிகளின்  நலனை மேம்பாடுத்துவதற்காக  இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஒன்றிய நிதித்துறை  இணைய அமைச்சர் பாகவத் கராத்  தெரிவித்துள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்