Aran Sei

18 வயது நிரம்பியோருக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு இல்லை – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒன்றிய அரசு

ந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முன்னாள் அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

மே 19 ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் கூடுதல தலைமை செயலாளர்களுடன், அப்போதை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் கூட்டம் நடத்தினார்.

அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 215 கோடி தடுப்பூசிகள், கொள்முதல் செய்யப்படும் என்றும், அதில் ஜூலை மாதம்வரை 51 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் – காவல்துறையினர் குவிப்பு

மேலும், இந்த ஆண்டு இறுதிக்கள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செயல்படுத்தப்படுதுவதை ஒன்றிய அரசு முன்மொழிகிறதா. ஆம் என்றால் விவரங்கள் கொடுங்கள் மற்றும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரங்கள்குறித்து தெரிவிக்க வேண்டும். எனக் கோரியிருந்தார்.

மேலும், இதுவரை தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு செலவிட்ட தொகை தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு அவர் கேட்டிருந்தார்.

பெகசிஸ் தொடர்பாக ஒன்றிய அரசின் அறிக்கையைக் கிழித்த மாநிலங்களைவை எம்.பி. – குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க தடை

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையமைச்சர் மருத்துவர் பாரதி பிரவின் பவார், “இந்த ஆண்டு முடிவுற்குள் 18 ஆண்டு நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என அரசு எதிர்ப்பார்க்கிறது. ஆனால் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எந்த காலக்கெடுவையும் அரசு நிர்ணயிக்கவில்லை” என தெரிவித்தார்.

மேலும், ஆக்ஸ்ட் 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 135 கோடி தடுப்பூசிகள்வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளுக்கு ரூ. 9,725.15 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்