Aran Sei

டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் எக்ஸ்ரே படத்தை தர முடியாது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் உடலில் குண்டு காயங்கள் இல்லை என, டெல்லி மற்றும் உத்திரபிரதேச காவல்துறையினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரில் உள்ள அரசு மருத்துவமனை வழங்கிய எக்ஸ்ரே மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை, அவர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதில், இறந்தவரின் உடலில் தூப்பாக்கி  குண்டு பட்ட காயத்திற்கான தடையங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கட்டுரை எழுதிய ’தி வயர்’ செய்தியாளர்: வழக்குப் பதிவு செய்த உத்திர பிரதேச காவல்துறை

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விவசாயி நவ்ரீத் சிங் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்திருப்பதாகவும், அவரது காயங்கள் அனைத்தும் சாலை விபத்தில் மட்டுமே சாத்தியம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நவ்ரீத் சிங் தலையில் தூப்பாக்கி குண்டு பட்ட காயம் இருப்பதாக, அவரது தாத்தா தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கைய நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

விவசாயி மரணம் குறித்து செய்தி வெளியிட்ட தி வயர் ஆசிரியர் மீது வழக்கு – முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த உத்திரபிரதேச காவல்துறை

முன்னதாக, டெல்லி காவல்துறை சார்பாக ஆஜரான டெல்லி அரசாங்கத்தின் ஆலோசகர் ராகுல் மெஹ்ரா, வழக்கறிஞர் சைதன்யா கோசைன் ஆகியோர், சம்பவத்தின்போது பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து வாதாடினர். “விவசாயி மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படும் தீனதயால் உபாதையா சாலையில் வேகமாக டிராக்டர் ஒட்டிக்கொண்டு வந்த அவர், தடுப்பில் மோதியால் டிராக்டர் கவிழ்ந்தது பதிவாகி இருக்கிறது. அதே காணொளியில் உயிருக்குப் பயந்து காவலர்கள் அங்கிருந்து ஓடுவது பதிவாகி இருக்கிறது. உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கும்போது எப்படி சுட்டிருக்க முடியும். மேலும் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கி செல்லாமல், அதே பகுதியில் 5 மணி நேரம் வைத்திருந்ததோடு, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸையும் அவர்கள் (விவசாயிகள்) தாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

உத்திரபிரேத  காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ”மனுதாரர்கள் தெரிவித்திருப்பது போன்று, விவசாயி மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மருத்துவ துறையால் வழங்கப்படும் மருத்துவ சட்ட ஆவணங்களான அசல் எக்ஸ்ரே தகடுகள், பிரேத பரிசோதனையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கும் எந்த ஏற்பாடும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்