Aran Sei

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எங்களிடம் தரவுகள் இல்லை என்று ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், விவசாயிகள் உயிரிழந்ததாக எங்களிடம் தரவுகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. இந்த சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. திருத்தப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில் உள்ள எல்லைகளில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான விவசாயிகள், கடந்த ஓராண்டு காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல்

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்த்து. லக்கீம்பூர் கெரியில் வேளாண் சட்டத்தை திரும்ப்பபெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய இணையமைச்சர் வாகனம் மோதி 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகவும், இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார். இதன்படி, கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில், வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, விவாதங்கள் இன்றி, தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தால் விவசாயிகள் உயிரிழந்ததாக இன்றிய அரசிடம் எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Source : ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்